தளபதி விஜய் ரசிகர்களுக்கும் அஜித் குமார் ரசிகர்களுக்கும் இடையிலான போட்டி பற்றி நாம் அனைவரும் அறிவோம், அது இன்றுவரை தொடர்கிறது என்றாலும், நடிகர்கள் ஒருவருக்கொருவர் நட்பான உறவைப் பேணுகிறார்கள். தற்போது இவர்களது படங்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு மோத உள்ளது
அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டுஅஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6.30மணிக்கு வலிமை திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
இதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை அதே தினத்தில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு அதற்கான புரோமோ வெளியிட்டுள்ளனர்.
மேலும் , பொதுவாக விஜய் படங்கள் வெளியானால் அஜித் ரசிகர்கள் விமர்சனம் செய்வதும் அஜித் படங்கள் வெளியானால் விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்றுதான். எப்போதும் போல சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டு தான் வருகிறார்கள்.
இந்த நிலையில், வலிமை படம் வெளியாகும் அதே தினத்தில் மாஸ்டர் படம் வெளியிடுவதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் எந்த திரைப்படம் அதிக டிஆர்பி சாதனை செய்ய போகிறது என்று பார்ப்போமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.