Home Accident News பஸ்ஸில் யன்னலால் எட்டி பார்த்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

பஸ்ஸில் யன்னலால் எட்டி பார்த்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த குழந்தையொன்று வீதிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி உயிரிழந்த சம்பவம் மாவனெல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டி எட்டிப் பார்த்துள்ளது. இந்த தருணத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குழந்தை மாவனெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனல்லை – ரம்புக்கனை வீதியில் கிரிகல சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சாப்பாடு கொடுக்க தாமதமாம் போதையில் மனைவியின் பல்லை உடைத்த கணவன்! உடைந்த பல்லை விழுங்கிய மனைவி, யாழ்.சாவகச்சோியில் சம்பவம்யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..
READ MORE >>>  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் கைது!
Previous articleதலைவன் வழியில் வந்தவர்கள் தடம்மாறி போவதில்லை
Next articleகொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு