Home Jaffna News மனைவியால் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

மனைவியால் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நபர் மனைவியினால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

விநாயகபுரம், வெற்றிலைக்கேணி, முள்ளியான் என்ற முகவரியைச் சேர்ந்த தாசன் சிவஞானம் (வயது 42) என்ற நபர் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அது குறித்த தகவல் நேற்று வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மருதங்கேணி பொலிஸார்,

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியும் பிறிதொரு நபரும் இணைந்து கொலை செய்து புதைத்தமை தொடர்பில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் சடலம் இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியால் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் மீட்பு மனைவியால் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் மீட்பு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பதாகைகளுக்கு தீயிட்டு எதிர்ப்பையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்திய உறவுகள்
READ MORE >>>  சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை பெண்
Previous articleவிக்னேஷ் சிவனுக்கு திருமணத்திற்காக இத்தனை கோடி மதிப்புள்ள பொருளை கிப்ட் ஆக கொடுத்த நயன் !! வாய்பிளந்த ரசிகர்கள்
Next articleதுல்கர் சல்மான் மற்றும் ம்ருனால் தாக்கூரின் ஆத்மார்த்தமான மெலடி காதல் ட்ரீட் இதோ !!