கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மகிந்தவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,
இலங்கையில் உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் இது வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என குமார் சங்கங்கார ஆவேஷம் வெளியிட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு வந்த தரப்பினர் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கங்கார தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இந்த தாக்குதல் காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குமார் சங்கங்கார தெரிவித்துள்ளார்.