மன்னார் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து இரவு 8 மணிக்கு கொழும்பு இருந்து புறப்பட்டு புத்தளம் கரிக்கட்டை ( ஹிதாயத் நகர்) பகுதியை அடைந்த போது பின்னால் வந்த வேன் ஒன்று குறித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேனில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தால் இரவு 2 மணியாகியும் மன்னாருக்கு செல்ல பேருந்து இல்லாமையால் அனைத்து பயணிகளும் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்ததாக தெரியவருகிறது.