Home CRIME NEWS மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகனும் கைது செய்யப்பட்டனர்.

மணியந்தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருந்தனர்.

பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் பயங்கரம் !! கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை கொலை செய்து வீட்டில் புதைத்த தம்பதி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுண்டான உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – காலய்த்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்..!
Next articleஇன்றைய ராசிபலன் இதோ 08.04.2022