5 வயது சிறுமியும், பாட்டியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிட்டிகேகம பொகரவெவில கிராமத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றிற்கு செல்லும் கால்வாயை கடக்கச் சென்ற மூதாட்டி (60) மற்றும் பேத்தி (05) ஆகியோர் இன்று (01) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

லக்ஷபான பொல்பிட்டிய பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. பேத்தியை முன்பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த மூதாட்டி, ஹிட்டிகேகம விகாரைக்கு அருகில் உள்ள கால்வாயை கடக்ந்த போது, ​​கால்வாயின் நீரோட்டம் அதிகரித்து இருவரும் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் சடலம் கால்வாய்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதுடன், காணாமல் போன பேத்தியின் சடலத்தைக் கண்டுபிடிக்க பிரதேசவாசிகள் மற்றும் பொல்பிட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பாட்டியின் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..