Home புலனாய்வு செய்திகள் 3000 மில்லியனைத் திருடிய சஜித் பிரேமதாச

3000 மில்லியனைத் திருடிய சஜித் பிரேமதாச

2015 – 2019 காலப்பகுதியில் முன்னாள் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச மத்திய கலாசார நிதியத்தில் இருந்து 3000 மில்லியன் ரூபாவை கமுக்கமாக அமுக்கியுள்ளதை இன்று (03) ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு அம்பலப்படுத்தினார்.

கலாசார நிதியத்திலோ அல்லது அதன் அங்கத்தவர்களின் அனுமதி பெறாமல்,
146 செலவுத் தலைப்புகளில் எந்தவிதமான அங்கிகாரமும் பெறாமல் சஜித் பிரேமதாச 3000 மில்லியன் ரூபாவைத் திருடியுள்ளார்.

15.11.2019 இல் இவ்வாறு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
17.11.2019 இடம்பெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் திடீரெனப் பணிப்பாளர் சபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரசிங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகிலவிராஜ், மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த ஆகியோர் பணிப்பாளர் சபையைச் சேர்ந்தவர்கள்.

தலைவர் ரணில் விக்ரமசிங்க, தம்பர அமில பிக்கு, அகிலவிராஜ் கையொப்பமிடவில்லை. பிரதமரின் செயலாளர் D.S.M. ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

இதன்மூலம் எந்தவொரு அனுமதியையும் பெறாமல் சஜித் பிரேமதாச மக்களின் பணத்தைத் திருடியைமை அம்பலமாகியுள்ளது.

ஆக, திருர்களாலும் திருடர்களைப் பாதுகாப்பவர்களாலும் ஒருநாளும் திருடர்களுக்கு தண்டனை வழங்கவும் முடியாது. திருடப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியாது. நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியாது.

ஊழல், மோசடிகளுக்கு எதிரான மக்கள்நேயமுள்ள அரசிலைக் கொண்டுள்ள அரசியற் கட்சியினாலே அதை சாதிக்க முடியும். தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் மக்களுக்கான ஆட்சியை கட்டியெழுப்புவோம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  புதிய பிரதமராக தினேஷ் சத்தியப்பிரமாணம்
READ MORE >>>  தென்னிலங்கையில் நிலநடுக்கம்
Previous articleவியாபாரி ஒருவரின் இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
Next articleஇன்றைய ராசிபலன் – 04/05/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்