3 யோசனைகள் முன்வைப்பு! நேற்றிரவு நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதியால் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலக, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முதல் யோசனை.

இதற்கு மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொகுகே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், சரத் வீரசேகர இந்த யோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்தாக பிரதமர் பதவி விலகி, அரசை நடத்துவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதல் என்பது இரண்டாவது யோசனையாகும். இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஆளுங்கட்சிவசம் 113 என்ற சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுங்கட்சியினர் உடன்படவில்லை.

நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல்தான் நிறைவடைந்துள்ளது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..