ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 11 எம்.பி.க்கள் நேற்று (11) இரவு ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை போக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.