Home Local news 246 கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

246 கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சகல கைதிகளின் தண்டனையும் ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு வலியுறுத்தி, வெலிக்கடை, பூஸ்ஸ, மஹர சிறைச்சாலைகளின் 246 கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

இவர்களுக்கு ஆதரவளித்து வெலிக்கடை சிறைச்சாலையின் 10 கைதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (27) காலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த 10 கைதிகளும் நேற்று (26) தமது போராட்டத்தைக் கைவிட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 200 கைதிகளும் மஹர சிறைச்சாலையில் 45 கைதிகளும் புஸ்ஸ சிறைச்சாலையில் 1 கைதியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனிமைப்படுத்தல் விதிமுறைகளில் புதிய மாற்றம்
Next articleமுல்லைத்தீவில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பு