Home Jaffna News தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதி துஷ்பிரயோகம்

தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதி துஷ்பிரயோகம்

ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதி துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்தில் யுவதி துஷ்பிரயோகம்

பேருந்தில் வேறு பயணிகள் இல்லாத சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாரதி மற்றும் நடத்துனர் குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் | சமூக சீர்கேடு | வாள்வெட்டு | ஆவா குழு | துஷ்பிரயோகங்கள்

 

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ். மருதனார்மடத்தில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்
Next articleதிருமணத்தை நிராகரித்த சிறுமிக்கு நடந்த கோர சம்பவம்.