Home Jaffna News வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு வீதியில் வைத்தே அண்டிஜன் பரிசோதனை செய்யும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்!

43 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேரும் கிளிநொச்சியில் 4 பேரும், வவுனியாவில் 9 பேரும் 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் கோவிட் தொற்றுக்கு பலி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். கொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 நாள்களில் 42 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொடிகாமத்தில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கும், வங்கி ஊழியருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கைதடியில் உள்ள அரச செயலகம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கோப்பாய் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்த இருவருக்கும் அச்சுவேலி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.ஏனைய இருவரில் ஒருவர் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரும் பல்கலைக்கழக மாணவனும் அடங்குகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சேர்க்கப்பட்ட மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் இளம் பெண் வைத்தியர் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தரும்புரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவி மாவட்டத்தில் முதல் நிலை
Next articleபீசிஆர் முடிவு வராமல் சடலத்தை கொடுத்து குழப்பம் விளைவித்த பணிப்பாளர் – இறுதிச் சடங்கில் பதற்றம்!