புலம்பெயர் நாடுகளில் வாழும் சில இளைஞர்கள் அங்குள்ள பெண்களை ஏமாற்றி , பின்னர் கை விட்டு செல்லும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன
சமுக வலை தளங்களினூடாக , வாட்ஸ் அப் குழுக்ளூடாக , ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் சந்திக்கும் பெண்களை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்வதாக சொல்லி அவர்களுடன் நெருங்கி பழகி சில காலம் இருந்துவிட்டு பின்னர் அவர்களை அம்போ என்று கைவிட்டுட்டு புதிய பெண்களை தேடி செல்வார்கள்
இவர்களது இத்தகைய செயல்களால் சில பெண்கள் தற்கொலை கூட செய்துள்ளார்கள் . சில பெண்கள் மனவிரக்திக்கு உள்ளாகியுள்ளனர் .
இவர்கள் பற்றி ஓரளவுக்கு அந்த அந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு தெரிய வந்த பின்னர் , மெதுவாக தாயகம் வந்து நல்லவர்கள் மாதிரி நடித்து இங்கு ஒரு ஏழை பெண்ணை கலியாணம் செய்துகொண்டு அங்கே போய் வாழ்வார்கள் .
வெளிநாட்டு மாப்பிள்ளை , சீதனம் இல்லை என்றவுடன் பெரிதாக விசாரிக்காமல் தங்கள் பெண்ணை கட்டி கொடுத்து விடுவார்கள் பெண்ணின் பெற்றோர்கள் . இத்தகைய ஆண்கள் எந்த பெண்ணோடும் நீண்டகாலம் வாழ மாட்டார்கள் .
வெளிநாட்டு கணவனுடன் வாழ்வென்று கற்பனையோடு போகும் பெண்கள், அங்கு சென்ற பின்னே உண்மைகளை அறிந்து , மனமுடைந்து போவார்கள் .பின்னர் அந்த பெண்களின் குடும்ப வாழ்க்கை நரகமாகவே கடக்கும் . கணவன் வேறு பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தாங்கி கொள்ளமுடியமல் பெண்கள் சிலர் தற்கொலை செய்துமுள்ளார்கள் .
இவை எல்லாம் அவ்வப்போது செய்திகளிலும் , சமூக வலைத்தளங்களிலும் வந்து கொண்டு தானிருக்கின்றன .
ஆனாலும் இவ்வாறு பெண்களை ஏமாற்றும் மன்மதன்களும் , இவ்வாறான மன்மதன்களை நம்பி ஏமாறும் பெண்களும் இன்னமும் இருக்கிறார்கள் என்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயம் .
அவ்வாறான மன்மதன்களில் ஒருவர் தான் கீழே படத்தில் உள்ள முரளி என்றழைக்கப்படும் கந்தசாமி முரளிகிருஷ்ணா என்பவராகும்
சாவகச்சேரி (டச் ரோட்டில் )யை சொந்த இடமாக கொண்ட இவர்கள் , குடும்பமாக புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்கள் .
இவரது அண்ணா அப்பு அல்லது திரு என்று அழைக்கப்படும் திருமாறன் என்பவராகும் . கனடாவில் கள்ளமட்டை போட்டு காசு சுருட்டிய வழக்கில் சிறைக்கு போய் வந்தவர் . கள்ள மட்டையால் சுருட்டிய பணத்தினால் வந்த வசதியான வாழ்க்கை காரணமாக கட்டிய மனைவி இருக்கவே , இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர் .
அதை அறிந்து மனைவி விவாகரத்து பெற்று விட மீண்டும் இன்னொரு திருமணம் முடித்தவர் . அந்த பெண்ணுடன் கூட தொடர்ந்து வாழாமல் , அவரையும் கை விட்டு மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் முடித்தவர்
அண்ணர் எவ்வழியோ அதே வழி தான் தம்பியின் வழியாகவும் அமைந்தது . ஆம் கனடாவில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் அல்லது கணவனை விட்டு பிரிந்து தனியாக வாழும் பெண்கள் (சமூகவலைத்தளத்தில் இயங்கக்கூடிய பெண்கள் ) போன்றோரை இலக்கு வைத்து தன் மன்மத வேட்டையை ஆரம்பித்தார் .
தாய் ஆறடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள் . அதே போல தான் அண்ணன் பாய்ந்ததை விட இரண்டு மடங்கு கூட பாய்ந்தார் முரளி . ஆம் இதுவரை ஆறு பெண்களை ஏமாற்றி இருக்கிறார் . ஒரு பெண்ணுடன் பழகும் பொழுதே இன்னொரு பெண்ணோடும் பழகி உங்களையே திருமணம் செய்வேன் என்று ஏமாற்றி பின்னர் கை விட்டு சென்றுள்ளார் .
இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களில் ஒருவர் தற்கொலை முயற்சிக்கு கூட போயுள்ளார் . மற்றவர்கள் தாங்கள் ஏமாற்றபட்டதை அறிந்து , மனமுடைந்து , ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
தான் வந்த நோக்கத்தை நிறைவு செய்ய பெண் ஒன்றை பார்த்து திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார் .
இனப்படுகொலை ஓன்று நடந்த பின்னர் அதன் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து , வாழ்வை கட்டியமைக்க முயலும் எம் தேசத்தில் இவாறான கயவர்களால் எம்மின பெண்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது
எம் தேசத்து பெற்றோர்களே ; உங்கள் பெண்களை இவ்வாறான காமக்கொடூரர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள் .
” இது எம் தேசம் .எம் தேசம் எமக்கு என்று தனித்துவமான கலை கலாச்சார பண்பாடுகளை கொண்டு கட்டியமைக்கப்பட்டது . பல மாவீரர்களின் தியாகங்களால் மெருகூட்டப்பட்டது .தொடர்ந்தும் எம் தேசத்தை நாம் கட்டிக்காப்போம் ”
நன்றி
ஈழவன்