கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடியனாறு தேக்கஞ்சோலை பிரதேசத்தை சேர்ந்த தெய்வேந்திரன் தெய்வலோஜினி வயது (21) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரின் வருமானம் போதாததால் அவரோடு முரண்பட்ட இவர் தனது குழந்தையை அன்போடு தூக்குவதற்குக் கூட கணவருக்கு அனுமதி வழங்காமலிருந்துள்ளார்.
நேற்று மாலை குழந்தையை தூக்குவதற்காக கணவர் சென்றபோது கொடுக்க மறுத்ததால் மனைவியை கடுமையாக ஏசியிருக்கிறார் கணவர்.
இதனால் மன உளச்சிக்குள்ளான நிலையில் நேற்றிரவு 07.00 மணிக்கெல்லாம் குழந்தையுடன் நித்திரை செய்துள்ளார்.
இரவுச்சாப்பாட்டை உட்கொள்ள கணவர் அழைத்த போது எனக்கு பசியில்லை நீங்க சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் நித்திரை செய்துள்ளார்.
கணவரும் இரவுச்சாப்பாட்டை உட்கொண்டு விட்டு மனைவி குழந்தை ஆகியோர் உறங்கிய இடத்திலேயே உறங்கியுள்ளார்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தந்தைக்கு தனது நெஞ்சில் கைவைத்து குழந்தை அழும் சத்தம் கேட்டதும் எழுந்து மனைவியை பார்த்தபோது காணாத நிலையில் மின்விசிறியில் சாறியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்தாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய பிரதேச செய்திகளிற்கு
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கரடியனாறு தேக்கஞ்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.