Home கிளிநொச்சி செய்திகள் பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி, கூச்சலிட்டதால் கூரிய ஆயுதத்தால் குத்திய திருடன்! மடக்கி பிடித்து அடித்து...

பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி, கூச்சலிட்டதால் கூரிய ஆயுதத்தால் குத்திய திருடன்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்..

பேருந்திலிருந்து இறங்கிய இளம் பெண்ணின் தங்க சங்கிலியை அறுக்க முயற்சித்த நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த இளம்பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, பெண் தடுக்க முயற்சித்ததுடன் மக்களின் உதவியை கோரி சத்தமிட்டுள்ளார்.

இதன்போது குறித்த திருடன் கூரிய ஆயுதத்தால் குத்தி பெண்ணை காயப்படுத்தியதுடன், சங்கிலியை அறுத்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் திரண்ட மக்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து நையப்புடைத்ததுடன், சங்கிலியை மீட்டு பெண்ணிடம் கையளித்தனர்.

தொடர்ந்து, பொலிசாரை அழைத்து திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஹரோயின்னுடன் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு விளக்கமறியல்!
READ MORE >>>  மக்கள் இரு இராணுவத்தை மடக்கிப் பிடித்தால் யாழில் பரபரப்பு!
Previous articleயாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர், பராமரிப்பாளர்களிற்கு புதிய கட்டுப்பாடுகள்!
Next articleஇன்றைய ராசிபலன் – 06/08/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..