Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சி பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள்

கிளிநொச்சி பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள்

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அலுவலகத்தின் கூரை பிரிக்கப்பட்டு, அலுவலகத்திற்குள் இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 6 மடிக்கணினிகள், மின்விசிறி ஒன்று, புகைப்பட கருவி ஒன்று, மேசை கணினி ஒன்று உள்ளிட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் வலயக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள் கிளிநொச்சி பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கோவிட் தொற்றுக்கு இலக்காகும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு
READ MORE >>>  மறுக்கப்பட்டது இராணுவத்தின் கோரிக்கை- யாழ்.மாநகர சபைக்கு ஆளுநர் விடுத்த எச்சரிக்கை!
Previous articleநீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்
Next articleகண்டியில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் திடுக்கிடும் தகவல்