Home குசும்பு எரிபொருளுக்காக பெண் ஒருவர் நடத்திய நாடகம்! தவறி வீழ்ந்ததால் வசமாக சிக்கினார்

எரிபொருளுக்காக பெண் ஒருவர் நடத்திய நாடகம்! தவறி வீழ்ந்ததால் வசமாக சிக்கினார்

எரிபொருக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது.

பிங்கிரிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணியாக நடித்த பெண்ணின் வயிற்றில் இருந்த தலையணை கீழே விழுந்ததால் அந்த பெண் சிக்கியுள்ளார்.

எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணிபோல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் வந்துள்ளார்.

பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் ஒரு வரிசையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றுமொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதற்கும் மேலதிகமாக சுகாதார சேவை ஊழியர்கள்,வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மாருக்காக தனியான வரிசையொன்றும் காணப்பட்டது.

இதை பயன்படுத்திக் கொண்ட அப்பெண் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியைபோல் வந்து எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பும் போது அவர் தவறி விழுந்ததில் வயிற்றில் கட்டி இருந்த தலையணையும் கீழே விழுந்துள்ளது.

சம்பவத்தை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில் கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் இணைந்தே கோப்பாய் பொலிஸார் உல்லாசம்
READ MORE >>>  கள்ள காதலனுக்காக சகோதரியான சிறுமியை கூட்டிக்கொடுத்த அக்கா? தனியார் விடுதியில் மூவரும் மாட்டினர்
Previous articleயாழில் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிட்ட மகளை கண்டித்ததற்காக கணவனின் மண்டையை உடைத்த மனைவி
Next articleகட்டிலில் படுத்து கர்ஜித்த சிறுத்தை மடக்கிப் பிடிப்பு