Home திருகோணமலை செய்திகள் திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி

திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில், திருகோணமலை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,நேற்றைய தினம் சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய தாதியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே வைத்தியசாலைக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து வருமாறும், சமூக இடைவெளிகளை பேணுமாறும், மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் திருகோணமலை சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் விபத்து: கடலுக்குள் வீசப்பட்ட பொலிசார்; ஒருவர் உயிரிழப்பு
READ MORE >>>  பிரதமரின் இல்லத்தை எரித்தமைக்கு சுமந்திரன் கண்டனம்
Previous articleமாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!! ஆசிரியரிற்கு எதிராக முறைப்பாடு
Next articleகாதல் தொடர்பு!! பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் மீது கத்திக்குத்து !