Home Jaffna News வட்டுக்கோட்டையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கினார்

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கினார்

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கிக் கொண்டார். மேலும் இருவர் தப்பித்துள்ளனர்.

வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

இன்று இரவு 8.15 மணியளவில் சங்கரத்தைச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வட்டுத்தெற்கு மற்றும் மூளாய் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.

இன்று இரவும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர்.

அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.

வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கட்டிலில் உறங்கிய தந்தையை பொல்லால் தாக்கி கொன்ற மகன்
READ MORE >>>  மலேரியாவை பரப்பக்கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டுபிடிப்பு
Previous articleநுவரெலியாவில் அடை மழை: இருவர் மரணம்; தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!
Next articleஇன்றைய ராசிபலன் – 02/08/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்