Home Anuradapura எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அடுத்த பெட்ரோல் விநியோகம் எப்போது என கேட்க மோட்டார் சைக்கிளில் பந்துலகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த தாயும் மகளும் எரிபொருள் பெறுவதற்காக வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதாக அனுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஒலயவாவ, ஸ்ரவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பி.டி.அனோமா ரணசிங்க என்ற பெண் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த உயிரிழந்தவரின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

டீசல் எடுக்க வந்து பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தின் மின்கலம் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்தவர் தனது தாயுடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து, எப்பொழுது அடுத்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வினவியதாகவும், மோட்டார் சைக்கிளில் திரும்பிச் செல்ல முற்பட்ட போது, ​​டிப்பர் திடீரென புறப்பட்டு தாய் மற்றும் மகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, காட்டுப் பகுதியில் விட்டுச் சென்ற கொடூரம் வேன் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது
READ MORE >>>  அம்பனையில் கோர விபத்து..! 22 வயது இளைஞன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சோகம், மேலும் ஒருவர் படுகாயம்
Previous articleயாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!
Next articleகண்டி குண்டசாலை பிரதேசத்தில் காணாமல் போன சிறுவர்கள் பற்றிய தகவலில்லை!