நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 113 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665,739ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 83 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 03 கொவிட் இறப்புக்களும் பதிவாகின.
இதன்படி இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,556 ஆக அதிகரித்துள்ளது.