தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிஅக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உடற்சோர்வு ஏற்பட்டதை அடுத்து நடைபெற்ற பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து வீட்டு தனிமையில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதோடு வீட்டில் இருந்த படியே தாம் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022