Home திருகோணமலை செய்திகள் 33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது

33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை குறித்த பௌசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதி வழுக்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பிரதேசவாசிகள் எரிபொருளை சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது 33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு; வவுனியாவில் சம்பவம்.
READ MORE >>>  கோதுமை மாவின் விலையை உடனடியாக அதிகரிப்பதற்கு ப்ரிமா நிறுவனம் தீர்மானம்
Previous articleகன்னியா விபத்தில் ஒருவர் மரணம்! மற்றுமொருவர் படுகாயம்
Next articleஅவுஸ்திரோலியா செல்ல முயன்ற 77 பேர் கைது