வத்தளையில் நான்கு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை காரில் மறைத்து வைத்து கொண்டு சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் இருந்து நான்கு கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், சாவக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.