Home கிண்ணியா செய்திகள் எரிபொருள் தீர்ந்ததால் பயணிகள் நிர்க்கதி

எரிபொருள் தீர்ந்ததால் பயணிகள் நிர்க்கதி

கிண்ணியா, கந்தளாய் ஊடான பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று எரிபொருள் தீர்ந்து போனதால், பயணிகளுடன் நடு வீதியில் நின்ற சம்பவம், நேற்றுமுந்தினம் (09) காலை இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிண்ணியா சாலைக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு டீசல் தீர்ந்து போனதால் தம்பலகாமம் -கிண்ணியா பிரதான வீதியில் நின்றுள்ளது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு நிலையே இதற்கான காரணமாகும் ஆகும்.

கந்தளாயில் இருந்து கிண்ணியா நோக்கிப் பயணிகளை ஏற்றியவாறு பயணித்த நிலையிலேயே பஸ் வீதியில் நின்றமையால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

கிண்ணியா பஸ் டிப்போவில் இருந்து டீசல் பெறப்பட்டு, மீண்டும் பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பொதுமக்கள் வீதியில் காத்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளான 212பேர் உயிரிழப்பு; இதுவரை 8583.
READ MORE >>>  யாழ். வங்கி ஒன்றின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா
Previous articleஅவுஸ்திரோலியா செல்ல முயன்ற 77 பேர் கைது
Next article6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்