Home திருகோணமலை செய்திகள் வெளிநாட்டு யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்??

வெளிநாட்டு யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்??

திருகோணமலை – நிலாவெளி ளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர்.

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞன் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மூன்று வருடங்களாக மாணவிகள் துஷ்பிரயோகம்; முல்லைத்தீவு ஆசிரியர் மீது மேலும் இரு வழக்குகள் தாக்கல்
READ MORE >>>  யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்களுக்கு 9 A; பரீட்சை முடிவுகள் இதோ!
Previous articleஆசைக் கணவனை மண்வெட்டியால் போட்டுத்தள்ளிய மனைவி
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 04/07/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்