Home Local news டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கம்

டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கம்

சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட நான்கு கோடியே 72 லட்சத்து 11 ஆயிரம் ரூபா பெறுமதியான 2.98 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் இன்று அதிகாலை இந்த தங்க தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பொருட்களுக்கு இருந்த இந்த தங்க தொகையை பயண பொதியில் இருந்து வெளியில் எடுத்து, பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ரோலியில் மறைத்து வைத்து விமான நிலையத்திற்கு வெளியில் கொண்டு செல்ல முயற்சித்த போது, சுங்க அதிகாரிகள் சந்தேக நபருடன் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

116 கிராம் எடை கொண்ட 16 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நான்கு தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கம் டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மண்ணெண்ணெய் குறித்த மர்மம் ; பொலிஸார் தீவிர விசாரணை
READ MORE >>>  வவுனியாவில் கொரோனா சடலங்கள் தகனம்; மக்கள் அசௌகரியம்!
Previous articleபடிக்கட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் மரணம்
Next articleபெரும் விபத்தில் சிக்கிய கேஜிஎப் நடிகர் – ஒரு நொட்டியில் உயிர் தப்பினார்.. அப்பளமாக நொறுங்கிய கார்!