Home Indian news இலங்கைக்கு கடத்தவிருந்த அபாய பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தவிருந்த அபாய பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து படகில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் பீடி இலைகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

அண்மைக்காலமாக தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இதனை அவ்வப்போது கியூ பிரிவு பொலிஸார், கடலோர பாதுகாப்பு பொலிஸார் மடக்கி பிடித்து வருகின்றனர்.

அதேபோன்று போதை பொருட்கள் கடத்தலும் நடந்து வருகிறது.

இதனால் மாவட்ட மரைன் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி மற்றும் பொலிஸார் இரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பொலிஸ் அதிகாரியை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் மீனவர்களின் உதவியுடன், மற்றொரு படகில், கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர்.

இலங்கைக்கு கடத்தவிருந்த அபாய பொருட்கள் பறிமுதல்! இலங்கைக்கு கடத்தவிருந்த அபாய பொருட்கள் பறிமுதல்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  காதலியினை சேர்த்துவைக்க சுவரொட்டிகள்- கவனயீர்ப்பு செய்த காதலன்
READ MORE >>>  12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்; ஒக்டோபரில் அமுல்!
Previous articleபயோடீசலின் தயாரித்த பாணந்துறை இளைஞன்; ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்குமாறு பிரதமர் பணிப்பு.
Next articleமுல்லையில் தானியார் காணியை துப்பரவு செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி! 13 ஆண்டுகளுக்கு பின் மீட்பு