Home திருகோணமலை செய்திகள் ஐஸ் கொடுத்த மாணவன் கைது

ஐஸ் கொடுத்த மாணவன் கைது

கந்தானை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் 15 வயதான மாணவனுக்கு தனியார் வகுப்பில் வைத்து ஐஸ் போதைப்பொருளை விற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மற்றுமொரு மாணவனை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விருவரும் சர்வதேச பாசாலையில் கல்விப்பயிலுகின்றனர் என விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.

கந்தானை தெற்கு பட்டகம பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு அண்மையில் வைத்து, போதைப்பொருள் விற்பனைச் செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்தே, மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளை விற்பனைச் செய்த மாணவனுக்கு, அந்தப் ​போதைப்பொருளை கொடுத்தவர் யாரென்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கிளிநொச்சியில் மருத்துவர் உட்பட 12 பேருக்கு கோவிட் தொற்று
READ MORE >>>  தென்னிலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி – வெளியான அதிர்ச்சித் தகவல்
Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 17/06/2022 இன்றைய பஞ்சாங்கம்
Next articleபணமோசடி செய்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது ! 18 மில்லியன் இலங்கை ரூபாவும் , வெளிநாட்டு நாணயங்களும் மீட்பு