Home மலைநாட்டு செய்திகள் விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகள் மாயம்

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகள் மாயம்

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 05 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதான யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகள் மாயம்

குறித்த இரண்டு யுவதிகளும் தோட்டத்தில் தொழில் செய்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  “கொரோனா தொற்று அதிகரிக்கிறது" எனினும் நாட்டை முடக்கும் இயலுமை இல்லை; ஜனாதிபதி
READ MORE >>>  இஸ்லாமிய அடிப்படைவாதமே உலகில் பயங்கரமானது! ஞானசார தேரர்
Previous articleஉப்பு நீரில் விளக்கேற்றும் அரிய காட்சி – பக்தர்கள் புடைசூழ, சிறப்பாக இடம்பெற்ற தீர்த்த உட்சவம்
Next articleமுல்லைத்தீவில் தனிப்பட்ட தகராறில் ஒருவர் கொலை