சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.
இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அத்தோடு இப்படத்தின் படக்குழு முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக இணைந்து படம் பார்த்தார்கள்.இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளது.
உலகம் முழுவதும் படம் ரூ. 15 கோடி வரை முதல் நாளில் மட்டும் வசூலித்திருக்கிறது, வெளிநாட்டில் மட்டுமே ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாம். வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் இல்லை என்பதால் டான் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்.
அத்தோடு இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா மோகன் எஸ். ஜே சூர்யா தொகுப்பாளர் விஜய். பிக்பாஸ் ராஜு எனப் பலரும் நடித்திருந்தனர் என்பதும் முக்கியமாகும்.
தமிழகத்தில் மட்டும் டான் ரூ 20 கோடி வசூலை கடக்க, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக நாளைக்குள் இப்படம் ரூ 50 கோடி வசூலை தாண்டும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக இதே நிலை நீடித்தால் டான் ரூ 100 கோடி வசூலை எட்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.