தென்னிந்திய சினிமா நடிகைகளில் 90 காலகட்டத்தில் வலம் வந்த முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. சினிமாவிற்கு தனது நிஜ பெயரான கவிதா ரஞ்சனி என்ற பெயரை ஊர்வசி என மாற்றினார்.
தமிழில் ஊர்வசிக்கு முதல் படம் என்றால் அது முந்தானை முடிச்சு தான், அதன்பிறகு மக்கள் நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்தார்.நடிகை ஊர்வசி முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை தான் 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறாள்.
பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்தார்கள், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊர்வசி கேட்ட அவரது கணவர் ஊர்வசி எப்போது மது போதையில் இருப்பார் அவரிடம் எப்படி பெண்ணை கொடுப்பது என போராடி மகளை அவருடனே வைத்துக் கொண்டார். இ
ந்த நேரத்தில் ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனாவின் மரணமும் அவரை மிகவும் பாதித்தது.இந்த கஷ்டங்களை தாண்டி ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்.
சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது ஊர்வசி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ,