Home Tamil News புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க? இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க? இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு

பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளாரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி இன்றிரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஏனைய தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்தார். எனினும், எவரும் உடன்படவில்லை. ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை ஏற்பட்டால் நாடு மேலும் சிக்கலை எதிர்கொள்ளும். எனவே, நாட்டு நிலைமையை கருதியே பதவி ஏற்கும் முடிவை ரணில் எடுத்துள்ளார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை இன்று சந்தித்து பேச்சும் நடத்தியுள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டால், அதனை ஆதரிப்பீர்களா என தம்மிடம் வினவப்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியும், ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

நாட்டில் தற்போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மீண்டும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார் அருந்திக்க பெர்னாண்டோ
READ MORE >>>  முதன் முறையாக 4000ஐ கடந்தது கொவிட் தொற்றாளர் தொகை!
Previous articleஇரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்
Next articleஅரசாங்கத்தை பொறுப்பேற்க தயார்! சஜித் தரப்பு முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்