Home Jaffna News சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர், சவுக்காடு கடற்கரையில் 123 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த டிங்கி படகொன்றை சோதனைக்குட்படுத்திய போது, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனையில் 15 உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில், சுமார் 492 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நாட்டை ரணிலிடம் ஒப்படைக்க ஆலோசனை?
READ MORE >>>  எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
Previous articleபாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியும் ; காவற்துறையினரின் கோரிக்கை, நீதிமன்றால் நிராகரிப்பு..!
Next articleயாழ்.காரைநகரில் கள்ளுத் தவறணையில் நடந்த கோஷ்டி மோதல்..! கத்திக்குத்துக்கு இலக்கான 28 வயது இளைஞன்