Home Local news இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

இன்றையதினம் (4) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இரண்டு பிரதான வலயங்களில் காலை 09.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும், மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 2 மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொழும்பு வர்த்தக வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் காலை 09.20 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்த போதிலும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் இளம் யுவதி தீடிரென உயிரிழந்ததால் பரபரப்பு!
READ MORE >>>  அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நீக்கம்:
Previous articleஇன்றைய ராசிபலன் – 04/05/2022, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleஇலங்கையிலிருந்து அகதியாக சென்ற இளம்பெண்ணுடன் அன்பாக பழகி நள்ளிரவில் வீடு புகுந்த தமிழக பொலிஸ்காரர் பணிநீக்கம்!