Home வவுனியா செய்திகள் விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக மரணம்! வீதியில் டயர்களை எரித்து இளைஞர்கள் போராட்டம்

விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக மரணம்! வீதியில் டயர்களை எரித்து இளைஞர்கள் போராட்டம்

வவுனியா, பூவரசங்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை வழிமறித்து ரயர்களை எரித்து இளைஞர்கள் போராட்டம் மேற்கொண்டதினையடுத்து அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துடன்,விபத்துக்குள்ளான பேருந்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டு பேருந்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.

குறித்த விபத்து சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்தவர்களின் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இரவு 8.00 மணியளவில் டயரினை எரிந்து போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் விஜயம் மேற்கொண்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிரடிப்படையினர் அதிரடிப்படையினர் விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக மரணம்! வீதியில் டயர்களை எரித்து இளைஞர்கள் போராட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மட்டு. மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன்
READ MORE >>>  தடுப்பூசிக்கு எதிராக சில மத போதகர்கள் பிரச்சாரம்; மக்களே எச்சரிக்கை!
Previous articleவலிகளை கடந்துதான் வலிமையாக வந்தார் !!! ஒவ்வொரு அஜித் ரசிகனும் பார்க்க வேண்டிய வீடியோ
Next articleஜிப்ரிக்கோவின் வீட்டில் மீண்டும் தாக்குதல் சந்தேகநபர்கள் மூவர் கைது