Home Accident News ஏறாவூர் இளைஞர் மரணம்; காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கைது!

ஏறாவூர் இளைஞர் மரணம்; காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கைது!

வாகன விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

கடந்த (3) ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவர் வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

ஏறாவூர் இளைஞர் மரணம்; காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கைது!

மோட்டார் சைக்கிளில் இளைஞர் சென்று கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கறுத்த நிலையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாமை பொலிஸாரின் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது
READ MORE >>>  கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது