கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் இன்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இயக்கச்சியில் ஏ9 வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பளை இயக்கச்சி பகுதியில் வசிக்கும் கரந்தாய் பளையைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவர் ஆவார்.
இன்று (20/09/2021) 12.00 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00 மணியளவில் உறவினர்கள் தேடிச்சென்ற வேலையிலேயே இயக்கச்சியில் ஏ9 வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையை பளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்,
தற்போது வடக்கில் கொரோனா மரணத்தை விட விபத்துகள் மற்றும் தற்கொலைகள், என சரமாரியாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது.
ஊரடங்கு வேளையிலே இவ்வாறான பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன என்பது வருந்தத்தக்க விடையமாகும்.
15 மாத குழந்தை புரைக்கேறி பரிதாபகரமாக பலி; கொவிட் தொற்று உறுதி.