Home Accident News நித்திரை தூக்கத்தால் மகிழுந்து விபத்து

நித்திரை தூக்கத்தால் மகிழுந்து விபத்து

மன்னார் மதவாச்சி பிரதான வீதி முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு பகுதியில் மகிழுந்து விபத்து.

மன்னார் மதவாச்சி பிரதான வீதி முருங்கன் பொலிஸ் பிரிவில் மகிழுந்து விபத்து மன்னார் வைத்தியசாலை சாரதி விபத்திற்கு உள்ளாகியதில், மன்னார் செய்திகள்,Mannar News , Newmanar ,

இன்று சனிக்கிழமை மாலை சிறிய ரக மகிழுந்து விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சாரதி காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த சிறிய ரக மகிழுந்து இசைமாலைத்தாழ்வு பகுதியில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதி முருங்கன் பொலிஸ் பிரிவில் மகிழுந்து விபத்து மன்னார் வைத்தியசாலை சாரதி விபத்திற்கு உள்ளாகியதில், மன்னார் செய்திகள்,Mannar News , Newmanar ,

மகிழுந்து வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு நித்திரை தூக்கம் ஏற்பட்டமையினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த பகுதியில் பிரதான வீதியின் இடது பக்கமுள்ள மரமொன்றுடன் மோதி தொடர்ந்து மற்றுமொரு பெரிய மரத்தில் மோதி மகிழுந்து நின்றுள்ளதாக விபத்தை நேரடியாக பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நித்திரை தூக்கத்தால் மகிழுந்து விபத்து

விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பூண்டுலோயா - தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!
READ MORE >>>  இளைஞரின் உயிரைப்பறித்த கோகோ-கோலா!