Home மட்டக்களப்பு செய்திகள் 20 வயது மனைவி மீது சந்தேகம்?? கழுத்தை நெரித்து கொன்ற 30 வயது கணவன்!!

20 வயது மனைவி மீது சந்தேகம்?? கழுத்தை நெரித்து கொன்ற 30 வயது கணவன்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து அவரை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ளார்.

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு, காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

20 வயது

இந்நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், இரண்டரை வயது குழந்தையை தனது சகோதரியின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் 12 மணியளவில் சரணடைந்துள்ளார்.

அவரை பொலிசார் கைது செய்யதனர்.

கைதானவர் 30 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
READ MORE >>>  அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் முறை
Previous articleநள்ளிரவில் பெண் தாதிக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல்!! ஆண் தாதி சிக்கினார்
Next articleகணவரையும் அவரது காதலியையும் நிர் வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற மனைவி