Home Local news 17 வயது மாணவியை காரில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

17 வயது மாணவியை காரில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை, காரில் ஏற்றிச் சென்று, கார் தரிப்பிடம் ஒன்றில் வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியர் தலங்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் அத்தை லண்டனில் வசித்து வருகிறார். லண்டன் செல்வதற்கு பரீட்சையில் தோற்ற சில புத்தகங்களைப் படிக்க வேண்டும்,

அவற்ற கொழும்பிலேயே பெறலாமென ஆசிரியர், மாணவியை ஏமாற்றி கொள்ளுப்பிட்டிக்கு தனது காரில் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளார்.

சந்தேக நபர் மாணவியை காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார். கிம்புலாவல வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

மாணவி முல்லேரியா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி சன்ன பெரேரா முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுஸ்லிம் வைத்தியரால் மரண பரிசோதனை – ஹிஷாலினியின் தாய் வெளியிட்டுள்ள சந்தேகம்
Next articleமக்களின் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் சாய்ந்து வீழ்ந்தது