Home Indian news 15 வயது மாணவியை போதைக்கு அடிமையாக்கி தொடர்ந்து பாலியல் நாசம் செய்த வீட்டு உரிமையாளர் மகன்..!

15 வயது மாணவியை போதைக்கு அடிமையாக்கி தொடர்ந்து பாலியல் நாசம் செய்த வீட்டு உரிமையாளர் மகன்..!

சென்னை தாம்பரம் அருகேயுள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவியிடம் கேட்டபோது, நான் சில நாட்களாகவே சோர்வாக உள்ளேன் என்று கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அப்போது மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை கொடுத்து ஆசுவாசப்படுத்திய ஆசிரியர்கள் பொறுமையாக விசாரித்துள்ளனர். அப்போது மாணவியை அவரது வீட்டு உரிமையாளர் மகன் விக்கி (22) என்பவன் பா.லி.ய.ல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விக்கியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அதில், பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவியை விக்கி தனது பைக்கில் அடிக்கடி அழைத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மாணவியை பைக்கில் ஏற்றுக்கொண்ட விக்கி அவனது நண்பன் வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் போதை பவுடரை கலந்து கொடுத்துள்ளான்.

அதை குடித்துவிட்டு தன்னிலை மறந்த மாணவியை விக்கி பலாத்காரம் செய்துள்ளான். இதுபோல, தொடர்ந்து மாணவிக்கு போ.தை ம.ருந்தை பழக வைத்துள்ளான்.

போதைக்கு அடிமையான மாணவியை அடிக்கடி நண்பன் வீட்டுக்கு அழைத்து சென்று ப.ல.மு.றை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.திருப்பது தெரிய வந்தது. ஒருகட்டத்தில் மா.ணவி எ.திர்ப்பு தெரிவித்தபோது

உனது பெற்றோரை தீர்த்து கட்டிவிடுவேன் என்றும் நீ போதை பவுடரை பயன்படுத்தியதை வெளியில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறான். இதனால் பயந்துபோன மாணவி இதுபற்றி யாரிடம் கூறாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், விக்கியை கைது செய்துள்ள போலீசார் அவனது நண்பனுக்கும் இதில் தொடர்பு இருக்குமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்கி, வீட்டு ஓனர் பையன் என்பதால் இவர்கள் பழகுவதை மாணவியின் வீட்டில் பெருசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

அதனை சாதகமாக்கிக்கொண்ட விக்கி மாணவியை இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளான். எனவே பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமனைவி மறைந்திருக்குமிடத்தை அறிய கள்ளக்காதலனின் தாயாரை கொன்ற ஹொட்டல் உரிமையாளர் கைது!
Next articleபுகையிதத்தில் மோதி நபர் ஒருவர் பலி