இணையத்தளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமியை பணம் கொடுத்து வாங்கி துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட வெலிசறை கடற்படை முகாம் வைத்தியசாலை வைத்தியரை இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருதய சிகிச்சை நிபுணரான லெப்டினன்ட் கொமாண்டர் திமுத்து டி சில்வா என்பவரே இன்று காலை பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறுமியை பணத்திற்காக பெற்றுள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலா 15,000 ரூபா வீதம், 30,000 ரூபா செலுத்தியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் லோகன அபேவிக்ரம முன்னிலையில் இன்று அவர் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 124 ன் படி நீதிமன்றத்தின் முன் சந்தேகநபர் வாக்குமூலமளிக்க கோரிக்கை விடுத்தார்.
9ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் வாக்குமூலமளிக்க உத்தரவிட்டார்.