பசறையில் 14 பேரின் உயிரை காவுகொண்ட கோர பஸ் விபத்தானது ஒட்டுமொத்த நாட்டையும் சோகக் கடலுக்குள் மூழ்க வைத்தது.
அத்துடன், பல பாடங்களையும் உணர்த்தியது. ஆனாலும் பஸ் சாரதிகள் இன்றும் அவசர ஓட்டத்தை விட்டுகொடுப்பதாக இல்லை.
இன்று காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களையும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்வோரையும்,
தொழிலுக்கு செல்வோரையும் ஏற்றிக்கொண்டு முந்தியடித்து ஒன்றுக்கொன்று மோதி செல்லும் பேருந்துகள் பசறை – பதுளை வீதி கோவில்கடை பகுதியில் பதிவாகியது.
பஸ் பயணம் மயான பயணமாக மாறிவிடக்கூடாது. எனவே, பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
(செய்தி – நடராஜா மலர்வேந்தன்)