துபாயில் வசித்துவரும் போதைப் பொருள் கடத்தல்காரரான, ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தன என்பவரின் நெருங்கிய நண்பரான ‘ரன் மல்லி’ என்பவரின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதின்போது அவரிடமிருந்து 103.9 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையால் சேகரிக்கப்பட்ட இந்த பணம், சந்தேக நபரின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.