Home CRIME NEWS 100,000 கேட்டேன். தரவில்லை. தலையில் ஒரே போடு… பெலவத்தை வர்த்தகர் கொலையில் கைதான இளம்ஜோடி அதிர்ச்சி...

100,000 கேட்டேன். தரவில்லை. தலையில் ஒரே போடு… பெலவத்தை வர்த்தகர் கொலையில் கைதான இளம்ஜோடி அதிர்ச்சி தகவல்!

ஷேட்ஸ் ஆடையக வலையமைப்பின் உரிமையாளரான தொழிலதிபர் ரொஷான் வன்னிநாயக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன், மனைவியான இளம் தம்பதியை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

அண்மையில் பெலவத்தையில் உள்ள அவரது மூன்று மாடி வீட்டின் மூன்றாவது மாடியிலுள்ள நீச்சல் தடாகத்தில் வர்த்தகரின் உடல் மீட்கப்பட்டது.

அஸீம்தீன் இன்சாப் டீன் (27) அவரது மனைவி ஹுஸ்வா பஸ்லிம் (23) ஆகியோரே கைதாகினர்.

சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

கொலை செய்ததை கணவர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் கடவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் உள்ளகத் தகவல்களின்படி, பிரதான சந்தேகநபர் கந்தானையிலிருந்து கடவத்தைக்குச் சென்று கடவத்தையில் உள்ள பிரபல ஆயத்த ஆடை விற்பனை நிலையத்திற்கு அருகில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் கடைக்கு அருகில் தங்கியிருப்பதாக பிரதான சந்தேகநபரின் மனைவியின் உறவினர் ஒருவர் கந்தானை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 30ஆம் திகதி தொழிலதிபரை கொலைசெய்த பின்னர், தம்பதியினர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். தொழிலதிபரின் வீட்டிலிருந்தபடி, அவரது தொலைபேசி வழியாக, தொழிலதிபரின் சொந்த கிரெடிட் கார்டில் இந்தோனேசியா செல்வதற்கு இரண்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர்.

31ஆம் திகதி அதிகாலையில் அதிவேக நெடுஞ்சாலையில் தொழிலதிபரின் சொந்த காரில் விமான நிலையத்திற்கு பயணம் செய்தனர். ஜா எலவிற்கு அண்மையாக கார் பழுதடைந்ததால், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து காரை அகற்ற 1969 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி வாகனமொன்றை பெற்று, காரை அகற்றினர். தொழிலதிபரின் தொலைபேசியையே இதற்கும் பயன்படுத்தினர்.

கராஜ் ஒன்றிற்கு வந்துள்ளனர். எனினும், கராஜ் பூட்டப்பட்டிருந்ததால், அதன் முன்பகுதியில் காரை இறக்கி விட்டு, ஹொரணை சந்தி வரை அந்த வாகனத்தில் பயணித்தனர். 10000 ரூபாய் பணமாகவும், 5000 ரூபாய் ஒன்லைன் மூலமாகவும், அந்த அவசரசேவை வாகனத்திற்கு வழங்கினர்.

பின்னர் விமான நிலையம் வந்து பல இலட்சம் ரூபாவிற்கு பொருட்கள் வாங்கினர். சில மணித்தியாலங்களிற்குள் 9 இலட்சம் ரூபாவிற்கு பொருட்கள் வாங்கினர்.

இந்தோனேசியா செல்ல முயன்ற போதும், விசா பிரச்சினை காரணமாக அவர்களால் புறப்பட முடியவில்லை. பஸ்ஸில் ஏறி விமான நிலையத்திலிருந்து கொலன்னாவைக்கு வந்ததாக கணவர் தெரிவித்துள்ளார். பின்னர், அவர்களின் தொலைபேசிகளைக் கண்காணித்த புலனாய்வாளர்கள், அவர்களின் இருப்பிடங்களை கண்டறிந்தனர்.

இவர்கள் உறவினர் ஒருவரால் கடவத்தைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலதிபரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுத்ததை அந்த நபர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மரணத்துக்கு அவர்தான் காரணம் என போலீஸார் நம்புகின்றனர்.

ஆனால் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதம், அவர் தனது மனைவிக்கு இதில் தொடர்பு இல்லை என்பதைக் காட்ட அவர் கடுமையாக முயற்சி செய்கிறார் என்று ஒரு அதிகாரி கூறினார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, பிரதான சந்தேக நபர் கடந்த 30ஆம் திகதி மாலை 6.37 மணியளவில் அல்லது அதற்கு அண்மையான நேரத்தில் பெலவத்தையில் உள்ள வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் இந்த வீட்டில் அவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் போது கொலை இடம்பெற்றுள்ளது.

மொபைல் ஆப் மூலம் இந்த தொழிலதிபரை தெரிந்து கொண்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

குறித்த வர்த்தகருடன் அவருக்குள்ள தொடர்பு குறித்தும் பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேகநபர் தானும் சந்தேகநபரும் குளத்தில் இருப்பதாகவும், அவசர காரியம் ஒன்றுக்காக 100,00 ரூபாவை தருமாறு தொழிலதிபரிடம் கேட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வர்த்தகர் மறுத்ததால் ஆத்திரமடைந்து தனது தலையில் கட்டையால் தாக்கியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பின்னர் வியாபாரியை குளத்தில் வீசிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு கொலன்னாவைக்கு சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் வெறொரு தகவலை கூறியுள்ளார். மனைவியிடம் தனக்கு பிரச்சனை இருப்பதாகவும், சில நாட்களாக வெளிநாடு செல்ல வலியுறுத்தியதாகவும், தன்னையும் அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால் மனைவியையும் அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று என கூறியுள்ளார்.

விசாரணை தொடர்கிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 06/02/2023, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleகுடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை