Home Anuradapura 10 வயது சிறுமி மரத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

10 வயது சிறுமி மரத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி வனாந்தரமான வயல் பகுதியில் மரமொன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொட்டாவ, சீப்புக்குளம் பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு மரத்தில் கட்டப்பட்டிருந்தார்.

சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, இனம்தெரியாதவர்களால் கை, கால், முகம் கட்டப்பட்டு, மரத்துடன் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை;
READ MORE >>>  ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை;
Previous articleவெள்ளவத்தையில் சிறுமி மாயம்
Next articleஇளம் குடும்பஸ்தர் கொலை; தந்தை, மகன் உட்பட ஆறு பேர் கைது