Home Local news 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது

10 நாட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது

நாடளாவிய ரீதியில் ஏற்படக் கூடிய மின் துண்டிப்புக்கு கவலையை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அரசாங்கம் , நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கி இயந்திர கோளாறே இந்த நெருக்கடிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்கு குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் நாடளாவிய ரீதியில் வெவ்வேறு நேர அடிப்படையில் மின் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதா என நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் காணப்படும் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை திருத்துவதற்கு 10 – 11 நாட்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த இயந்திரக் கோளாறு திருத்தப்பட்டதன் பின்னர் மின்துண்டிப்பு நெருக்கடி ஏற்படாது. அதற்கமைய இம்மாதம் 20 ஆம் திகதி வரை இந்த நெருக்கடி தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் வங்கி ATM இயந்திரத்தில் 7,50,000 திருட்டு
Next articleவீடற்றவர்களுக்கு நிரந்தர வீட்டு வசதி: முதல் கொடுப்பனவாக 5,00,000 ரூபா செலுத்தினால் போதும்!