Home Local news ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திர சிகிச்சையில் சாதனை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திர சிகிச்சையில் சாதனை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திர சிகிச்சையில் சாதனை

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முனனெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை இயக்குனர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.

37 வயதுடைய நபருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொற்கொள்ளப்பட்டுள்ளது. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இந்த நபருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்பட்டது.

கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திரசிகிச்சை நூறு வீதம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென வைத்தியர் ஹேவகே தெரிவித்துள்ளார்.

மூளை சாவடைந்த 62 வயதுடைய நபரின் கல்லீரல் ராகம வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ளப்பட்டு 12 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சத்திர சிகிச்சையில் சாதனை

விசேட அறுவை சிசிசை வைத்தியர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட் அவதானமிக்க காலப்பகுதியில் இந்த அவதானம் குறித்து சிந்திக்காமல் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை மிகவும் செலவுமிக்க ஒன்றாகும். இந்தியாவில் இதனை மேற்கொள்வதற்கு 120 லட்சம் ரூபாய் செலவாகும். எனினும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் எவ்வித கட்டணமும் அறவிடாமல் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாள் முழுவதும் பெர்பியூம் நீடித்து இருக்க சில அழகு குறிப்புகள் ..!
Next articleயாழ்.காதலியையும் – குழந்தையும் கொடூரமாக கொன்ற காதலன்! வெளியான திடுக்கிடும் தகவல்